2026 மே 07, வியாழக்கிழமை

பொத்தானையில் முகைதீன் ஜூம்ஆப் பள்ளி வாயல்

A.P.Mathan   / 2013 ஜூன் 14 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்
 
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேற்றக் கிராமமான பொத்தானையில் புதிதாக அமைக்கப்பட்ட முகைதீன் ஜூம்ஆப் பள்ளி வாயல் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
 
பள்ளிவாயல் தலைவர் ஏ.அஹமட் லெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், இலங்கை ஜமாதே இஸ்லாமியின் இணைப்பாளர் எம்.எம்.பஷால், ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.நியாஸ், புனானை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேர்ணல் ராஜகுரு பண்டார, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவிர ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1985ஆம் ஆண்டு இக் கிராமத்தில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, காவத்தமுனை பகுதிகளில் வாழ்ந்து வந்து யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் தற்போது மீள்குடியேறி பொத்தானைக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
 
இலங்கை ஜமாதே இஸ்லாமின் முப்பது லட்சம் ரூபா நிதியளிப்பில் இப் பள்ளிவாயல் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .