.jpg)
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை வகுப்பறைகளை உடைத்து அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.அஸ்ரப் தெரிவித்தார்.
இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் இடம்பெற்றிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் சந்தேகிக்கின்றனர்.
இன்று வழமை போன்று பாடசாலை நடைபெற்று சுமார் 12 மணியளவில் ஜூம்ஆத் தொழுகைக்காக பாடசாலை மூடப்பட்ட நிலையில் அதிபர் உட்பட சகல ஆசிரியர்களும் பாடசாலையை விட்டுச் சென்றிருந்தனர்.
இச் சம்பவேளையில் பாடசாலை அண்மித்த அனைவரும் ஜூம்ஆ தொழுகைக்காக சென்ற பின்னர் சன நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தில் பாடசாலை வளவினுல் நுளைந்த திருடர்கள் சிலர் வகுப்பறைகளை உடைத்து அலுமாரிகளில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
இன்று பிற்பகல் 03.30 மணியளவில் மீண்டும் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியர் ஒருவர் வகுப்பறையைப் பார்த்த வேளையில் குறித்த வகுப்பறைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.