2026 மே 09, சனிக்கிழமை

கல்வியை விலைபேசி விற்க வேண்டாம்: எம்.எஸ்.எம்.சுபைர்

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

'கல்வியை ஒருபோதும் விலைபேசி விற்றுவிட வேண்டாம். அதை எமது எதிர்கால சந்ததிக்காக விட்டுவிடுங்கள்' என கிழக்கு மாகாண சபையன் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுiபார் தெரிவித்தார்.

கிழக்கு பிராந்திய ஈசொப்ட் நிறுவனத்தில் கணினிக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த சுமார் 600 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு தேவநாயக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'யுத்தத்தால் நாம் இழந்த சொத்துக்களை மீளப்பெற வேண்டுமானால், அதற்கு ஒரே வழி 'கல்வி' என்ற ஆயுதம்தான். அக்கல்வியினால்தான் நாம் எமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் பெற்றுகொள்ள முடியும்.

கடந்த காலங்களில் கணினி அறிவினையும், வர்த்தக, விஞ்ஞானம் போன்ற உயர் கல்வியினையும் பெற பல மைல் தூரம் கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது.

பெண் பிள்ளையாக இருந்தால் அப்பிள்ளையின் பாதுகாப்பு பற்றிச் சிந்திக்க வேண்டியும் இருந்தது.

ஆனால் இன்று அந்நிலை மாறி எமது காலடியிலேயே கல்வியைப் பெற எமக்கு பல வழிகள் கிடைத்துள்ளன.

அரசாங்கம் கல்வியில் பாரிய மாற்றத்தையும் முன்னேற்றங்களையும் கொண்டு வந்திருக்கின்ற வேளையில், அதற்கு ஏற்றாற்போல தனியார் கல்வி நிறுவனங்களும் தமது கொடியினை பறக்க விடுகின்றன.

ஆனால், சில கல்வி நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயற்படுகின்றன.

தயவு செய்து கல்வியை ஒரு போதும் விலை பேசி விற்றுவிட வேண்டாம் என இத்தகைய கல்வி நிறுவனங்களை நான் கேட்டுகொள்கின்றேன்.

எமது நாளைய தலைமுறையினருக்காக கல்வியை பரிசளியுங்கள். அதன் மூலம் எமது மாவட்டத்திலும் மாகாணத்திலும் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கி நல்ல மாற்றத்தினை கொண்டுவர நாம் ஒவ்வொரும் பொறுப்புடன் கடமையாற்றுவோம்'  என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .