2026 மே 09, சனிக்கிழமை

dd

ஜனாதிபதி -கிழக்கு அமைச்சர்கள் அவசர சந்திப்பு

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் ஆளும்தரப்பு உறுப்பினர்களை ஜனாதிபதி அவசர சந்திப்பொன்றுக்கு அழைத்துள்ளதாக கிழக்கு மாகாண  சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பு இன்று சனிக்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக அவ் உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கும் மாகாண சபை அமைச்சர்களுக்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .