2026 மே 09, சனிக்கிழமை

பிள்ளைகளின் பிறந்தநாள் பரிசாக மாங்கன்றுகள்

A.P.Mathan   / 2013 ஜூன் 15 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
'மரம் நாட்டி சூழலைப் பாதுகாப்போம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உலக தரிசன நிறுவனம் (வேர்ல்ட் விஷன்) சிறார்களை இயற்கையோடு இணைக்கும் திட்டத்தை அமுலாக்கி வருகின்றது. இத்தகையதொரு நிகழ்வு நேற்று மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்றது.
 
இதில் நான்காயிரத்து எண்பத்திரெண்டு சிறார்களுக்கு சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கறுத்தக் கொழும்பான் மற்றும் விளாட் மாங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
 
சிறுவர்களுக்கான பிறந்தநாள் பரிசாக இந்த மாங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டதாகவும் இவை அரச அங்கீகாரம் பெற்ற சிறந்த விவசாயப் பண்ணை நாற்று மேடைகளில் உருவாக்கப்பட்டவை என்றும் வேர்ல்ட் விஷன் நிறுவன சிறுவர் பராமரிப்பு இணைப்பாளர் பிரின்ஸ் ஜேசுதாஸன் தெரிவித்தார்.
 
சிறார்கள் இயற்கையோடு ஒட்டிய உறவில் இணைந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இத்தகைய கனி மரங்கள் பிறந்தநாள் பரிசாக வழங்கப்படுகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.
 
நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சினி முகுந்தன், வேர்ல்ட் விஷன் நிறுவன ஏறாவூர்ப்பற்று பிரதேச முகாமையாளர் அ.ரவீந்திரன் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறார்களுக்கு பிறந்தநாள் பரிசாக மாங்கன்றுகளை வழங்கி வைத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .