2026 மே 09, சனிக்கிழமை

dd

கருக்கு கீறி சிறுவனுக்கு காயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 16 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

பனை மரத்தில் ஏறி அதன் உச்சியிலிருந்தே அருகிலிருந்த முந்திரி மரத்திற்குத் தாவுவதற்கு முற்பட்ட சிறுவன் ஒருவன் பனை மரத்தின் கருக்குகள் கீறி காயமடைந்துள்ளான்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைத்தோட்டத்தை சேர்ந்த கிருஷக்ன் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளான்.

இந்தச் சிறுவன் சக நண்பர்களுடன் நேற்று சனிக்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்தபோது திறமையைப் பரிசீலிப்பதாக சபதமெடுத்து பனைமரத்தில் ஏறியுள்ளான்.  பின்னர் இவன்  பனை மரத்திலிருந்து அருகிலிருந்த முந்திரி மரத்திற்கு தாவுவதற்கு முற்பட்டபோதே பனை மட்டையின் கருக்குகள் சிறுவனின் விலாப்பகுதியில் கீறியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து இந்தச் சிறுவன் வெருகல் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. 

பனை மரக் கருக்குகள் பிளந்த காயத்திற்கு சிறுவனுக்கு தையல் போடப்பட்டதாக வெருகல் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .