2026 மே 09, சனிக்கிழமை

dd

விபத்தில் வயோதிபர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 16 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஏறாவூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான அஸனார் உதுமாலெப்பை (வயது 68) என்பவரே விபத்தில்  படுகாயமடைந்துள்ள நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை பகல் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு இவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோதே  இவர் மீது வான் ஒன்று மோதியதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

உடனடியாக இவர் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டார்.

குறித்த வானின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .