2026 மே 09, சனிக்கிழமை

கிணறுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 16 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு – ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தையில் கடந்த யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களின் நலன்கருதி கிணறுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தையில்  முதற்கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 50  கிணறுகளையும் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகரபிதாவுமான அலிஸாஹிர் மௌலானாவின் முயற்சியில் தார்-அல்-பிர் அஸோஸியேசனின்   நிதியுதவியில் இந்தக் கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நகரபிதா அலிஸாஹிர் மௌலானா,  கிணறுகளை பொதுமக்களின் பாவனைக்கு கையளித்தார்.
நேயம் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதி எச்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதி முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .