2026 மே 09, சனிக்கிழமை

dd

கொள்ளைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான  குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிவான் எம்.ஐ.நூர்தீன் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களை, மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிவான் எம்.ஐ.நூர்தீன் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிச் நகர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள்  கொள்ளையிடப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்துவிட்டு மறைந்திருந்தபோதே இந்த 4 சந்தேக நபர்களையும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மடக்கிப் பிடித்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

காஸ் சிலிண்டர், மின் விசிறிகள் உள்ளிட்ட இன்னோரன்ன வீட்டு உபயோகத்திற்குரிய மின் உபகரணங்களை இவர்களிடமிருந்து கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .