2026 மே 09, சனிக்கிழமை

dd

கிழக்கு முதல்வரின் செயற்பாடுகள் திருப்தி இல்லை; ஆளுங்கட்சியினர் முறைப்பாடு

Menaka Mookandi   / 2013 ஜூன் 16 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபை செயலிழந்து வருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயற்திறன் இல்லாதவராக காணப்படுவதாகவும் அவரின் செயற்பாடுகள் திருப்தியற்றவையாகக் காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டமொன்றின் போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிடம் விளக்கமளித்துள்ளனர்.

இதனையடுத்து, கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் முறண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இந்த உயர்மட்ட கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் முறண்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளாத போதிலும் அமைச்சர்களான சுசில் பிறேமஜயந்த, மைத்திரிபால சிறிசேன, றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எம்.மன்சூர், எம்.எஸ்.உதுமாலெவ்வை, ஹாபீஸ் நசீர் அகமட், உட்பட கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கிழக்கு மாகாணசபை செயலிழந்து வருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயற்றிறனில்லாதவராக காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை எனவும் ஆளுநர், அதிகாரிகளை பயறுத்தி வருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண அமைச்சர்களை மதித்து செயற்படுவதில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு இணைப்பு இல்லாமல் இருப்பது பற்றியும் மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயங்களை கேட்டறிந்துகொண்ட அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் இதை தெரிவித்து விரைவில் இதற்கான தீர்க்கமான முடிவு எடுக்கப்படுமெனவும் அதுவரை அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறும் வலியுறுத்தியதாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • கிழக்கின் புத்திரன் Sunday, 16 June 2013 08:10 AM

    முதலமைச்சர் நேர்மையானவர், பொதுசொத்தை அவருடைய நிருவாகத்தின் கீழ் யாரும் சூறையாடி மோசடி செய்ய அனுமதிக்க மாட்டார்.

    மாகாணசபை அமைச்சராக உள்ளவர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் முதலமைச்சர் பதவி தமக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று கனவு கண்டுகொண்டு தேர்தலில் இறங்கியவர்கள். இறுதியில் இவர்களின் கனவு நனவாகாததால் நேர்மையான மனிதர் மீது சேறுபூச முற்படுகின்றனர். இறைவன் எப்போதும் நல்லவர்களின் பக்கம்தான் இருப்பான்..

    Reply : 0       0

    vallarasu Sunday, 16 June 2013 04:31 PM

    பரவா இல்லை. உங்களுக்கு இப்போதுதாவது விளங்கிவிட்டது. ஆனால் மக்களுக்கு அப்போது விளங்கி விட்டது... உதாரணம்+ தம்பலகாமம்+ கிண்ணியா வீதி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .