2026 மே 09, சனிக்கிழமை

dd

இந்து ஆலயங்களை பாதுகாப்போம்; மட்டு. அமைதிப் பேரணிக்கு பொலிஸார் தடை

Menaka Mookandi   / 2013 ஜூன் 16 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள் தொடர்ந்து சேதமாதக்கப்பட்டு வருவதைக் கண்டித்து 'இந்து ஆலயங்களைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடத்தப்படவிருந்த அமைதிப் பேரணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பேரணியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்தவர்கள், மட்டக்களப்பு, தேற்றாத்தீவு பிள்ளையார் ஆலயத்தில் கூட்டத்தில் அவசரக் கூட்டமொன்றை நடத்தினர். இதில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.யோகேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் கூறுகையில், 'பொது பல சேனா அமைப்பு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்துவதாயின் எந்தவொரு பொலிஸ் அனுமதியும் பெறத்ண்வையில்லை. ஆனால் தமிழர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்த்தவர்கள் ஊர்வலங்கள் பேரணிகள் நடத்துவதாயின் பொலிஸ் அனுமதி தேவைப்படுகின்றது' என்றார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மட்டக்களப்பு காந்தி சிலை உட்பட பல இந்து பெரியார்களின் உருவச் சிலைகள் உடைக்கப்பட்டன. ஆனால் இதை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனால் எங்களுக்கு பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது. இதில் சம்பந்தப்பட்டோரை கண்டுபிடிக்க பாதுகாப்புத் தரப்பினர் ஆர்வம் காட்டவில்லை' என்றும் சுட்டிக்காட்டினார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பல இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டும் கோவில்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டும் கோவில் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டும் உள்ளன. இன்னும் இதில் சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்படவில்லை.

இதை கண்டித்து கவனயீர்ப்பு அமைதிப் பேரணியொன்றை நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் அனுமதி தருவதற்கு மறுத்துள்ளனர். எனினும் பிறிதொரு தினத்தில் இந்த பேரணியை செய்வோம்' என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Rajan Sunday, 16 June 2013 06:16 PM

    தங்களது சொந்த ஊரில் உள்ள கிறிஸ்தவ வணக்கஸ்தலங்கள் உடைக்கப்பட்டு மதகுருக்கள் காயப்படுத்தப் படுகிறார்களே இது குறித்த தங்கள் நடவடிக்கை என்ன...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .