2026 மே 09, சனிக்கிழமை

dd

இரண்டு விரல்களால் சாதனை

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டு விரல்களினால் மாத்திரம் மோட்டர் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை திருத்தும் வேலையில் கடந்த 30 வருடங்களாக ஒருவர் ஈடுபட்டு வருகின்றார்.

பிறப்பிலிருந்து கையில் இரண்டு விரல்களை மாத்திரம் கொண்டுள்ள சாகுல் ஹமீத் பக்கீர் முகைதீன் எனப்படும் இவர், புதிய காத்தான்குடி ஹிழுறிய்யா பள்ளிவாயல் வீதியில் வசித்து வருகின்றார்.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி தெற்கு எல்லை வீதியில் இவர் இந்த மோக்ட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். 51 வயதான இவர் கடந்த 30 வருடங்களாக செய்துவரும் இந்த தொழிலை எவரிடமும் கற்றுக்கொள்ளாமல் தானே செய்யத்தொடங்கியதாக குறிப்பிடுகின்றார்.

கைகளில் விரல் இல்லாதவர்களும் இவ்வாறான கைத்தொழில்களை செய்ய முடியுமென்பதை இறைவன் என் மூலம் காட்டியுள்ளான் என குறி;ப்பிடுகின்றார்.

திருமணம் செய்து நான்கு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கால்களிலும் விரல்கள் இல்லை. மோக்ட்டார் சைக்கிள்களின் டயர்களுக்கு பெச் போடுதல் மற்றும் கம்பிகளை மாற்றுதல், திருத்த வேலைகளை செய்தல் துவிச்சக்கர வண்டிகளை பழுது பார்த்தல் போன்ற வேலைகளை இவர் செய்துவருகின்றார்.

என்னிடமுள்ள இரண்டு விரல்களை மாத்திரம் கொண்டு நாளொன்றுக்கு ஆயிரம் ருபா வருமானம் ஈட்ட முடிகின்றது எனவும் மேற்படி சாகுல் ஹமீத் பக்கீர் முகைதீன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .