2026 மே 09, சனிக்கிழமை

dd

விசேட தேவையுடையோருக்கான உபகரணம் வழங்கல்

A.P.Mathan   / 2013 ஜூன் 17 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
 
மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தால் விசேட தேவையுடையோருக்கு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் உபகரணம் என்பன வழங்கப்பட்டன.
 
இவற்றினை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் இன்றைய தினம் திங்கட்கிழமை பகல் வழங்கி வைத்தார்.
 
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவை சேர்ந்த விசேட தேவையுடையவர்களான  மா.சீனித்தம்பி, செ.மகேந்திரன், இ.முத்துவேல், யோகநாதன் ஆகியோருக்கே இவை வழங்கி வைக்கப்பட்டன.
 
பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த கோராவெளி, கிரான் கிழக்கு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கே இவை வழங்கப்பட்டன.
 
கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் காது கேட்காதவர்களுக்கான கருவிகள் இருவருக்கும், அங்கவீனர்களுக்கு வீடுகள் இரண்டுபேருக்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .