2026 மே 09, சனிக்கிழமை

dd

'தொற்றுநோய்கள் அதிகம் பரவும் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது'

Kogilavani   / 2013 ஜூன் 18 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


'டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் அதிகமாக பரவும் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இதற்கு உணவுப் பழக்க வழக்கங்களும், பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளும் மற்றும் வீட்டுச் சுற்றாடலுமே காரணமாக உள்ளது' என மட்டக்களப்பு மாவட்டச் செயலக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பொறுப்பாளர் சி.கோகுலன் தெரிவித்தார்.

சுற்றாடல் முன்னோடிக் குழு நிகழ்ச்சியை வலுவூட்டும் முகமாக வலய மட்டத்தில் நடைபெறும் ஆசிரியர் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கான கருத்தரங்கிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கடந்த 5 மாத புள்ளி விபரங்களின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 265 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் மட்டக்களப்பு நகர பொது சுகாதாரப் பிரிவில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .