2026 மே 09, சனிக்கிழமை

கோழி வளர்ப்பு வாழ்வாதார உதவித் திட்டம்

A.P.Mathan   / 2013 ஜூன் 18 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
இயற்கைமுறை விவசாய அபிவிருத்திக்கூடாக கோழி வளர்ப்பு வாழ்வாதார உதவித் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை வாகரை பனிச்சங்கேணியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
கொய்க்கா (KOICA) கொரியநிதி அனுசரணையுடன் வேல்ட் விஷன் பிரந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாகரையில் இயற்கை முறையிலான விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இது இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
வாகரைப் பிரதேச செயலகத்தின் திவிநெகும திட்டத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட வறுமையிலும் வறுமையான பயனாளிகளான 150 குடும்பங்களுக்கு இந்த வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கப்பட்டன.
 
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மொத்தம் ஆறாயிரம் ரூபாய் பெறுமதியான உள்நாட்டு நல்லினக் கோழிக் குஞ்சுகள் 15 வழங்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் வாகரைப் பிரிவு கால்நடை வைத்தியர் ஆர்.டி.எம்.எச். மதுமாலா, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம். ரமீஸ், வேல்ட் விஷன் நிறுவனத்தின் திட்டவரைவு கண்காணிப்பு மற்றும் மீளாய்வு இணைப்பாளர் ஆர். மஹிந்தன் ராஜேந்திரம், வேல்ட் விஷன் திட்ட உத்தியோகத்தர் என். சுரேஷ், திவிநெகும இணைப்பாளர் எஸ்.ரவிகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அனித்தா உட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0

  • kumar Wednesday, 19 June 2013 11:06 AM

    நல்ல வேலைத் திட்டம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .