2026 மே 09, சனிக்கிழமை

கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை

Kogilavani   / 2013 ஜூன் 19 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்தரை இன்று புதன்கிழமை காலை ஆரையம்பதி கந்தசாமி கோயிலை வந்தடைந்தது.

சுமார் இரண்டரை மாதங்களைக்கொண்ட இப்பாதயாத்திரை யாழ்ப்பாணம் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து கடந்த மாதம் ஆரம்பமாகி யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கூடாக அடுத்த மாதம் கதிர்காமம் முருகன் ஆலய திருத்தலத்தை அடையவுள்ளது.

இடை நடுவில் குறித்த மாவட்டங்களின் பிரதான ஆலயங்களில் தங்கி மேறபடி பக்தர்கள் கதிர்காமத்தை அடையவுள்ளனர்.
இப்பாதையாத்திரை குழுவில் ஆண்கள் பெண்கள் அடங்கலாக சுமார் 100 பேர் உள்ளடங்குகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .