2026 மே 09, சனிக்கிழமை

வந்தாறுமூலை நூலக வீதியை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2013 ஜூன் 19 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வந்தாறுமூலை நூலக வீதியை புனரமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நீண்டகாலமாக குண்டும் குழியுமாக காணப்படும் இவ்வீதியைப் புனரமைப்பது குறித்து பல தடவைகள் கிராம மக்கள் பிரதேச சபையுடன் பேசியுள்ள போதும் எந்த விதமான பிரயோசனமும் கிடைக்கவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

காபட் இடப்பட்ட மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியுடன் இணைந்ததாக இருக்கும் இவ் வீதி புனரமைக்கப்படவுள்ளதாக பல தடவைகள் பிரதேச சபை தவிசாளரால் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் அதற்கான எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

அதேநேரம், தற்போதைய காலநிலையுடன் வீதி அமைக்கப்படும்போதே அது சிறப்பான வீதியாக அமையும். வெள்ளம் கரை புரண்டு ஓடும் பகுதி என்பதால் மழைக்காலத்திற்குள் இவ் வீதியை புனரமைத்து தருமுhறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வீதி மட்டக்களப்பில் பிரசித்தமான மகா விஷ்ணு ஆலயம், விஷ்ணு மகா வித்தியாலயம், பலாச்சோலை கிராமம் ஆகியவற்றுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

அதேநேரம் கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள கிராமத்தில் பிரதான வீதிக்கு அருகிலுள்ள வீதி ஒன்று மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகின்றமையானது கிராமத்திற்கு வருகை தருபவர்களையும் கவலைக்குள் ஆழ்த்துவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வேக்கவுஸ் வீதியும் இவ்வாறு நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

இவ் வீதி புனரமைக்கப்படும் என பல தடவைகள் பிரதேச சபைத் தவிசாளர்; உறுதியளித்திருந்தார்.

ஆனால் பிரதேச சபை கலைக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னமும் இவ் வீதிகள் திருத்தப்படாமை குறித்து கிராம மக்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .