2026 மே 09, சனிக்கிழமை

dd

இயற்கை முறையில் பயிர்ச்செய்கை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 19 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


இயற்கை முறையில் பயிர்ச்செய்கை உற்பத்தி செய்யும் முயற்சி கிராமங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

'திவிநெகும' பயனாளிகளுக்கு விழிப்புணர்வூட்டி அவர்கள் மூலமாக இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாங்கேணி தெற்கு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் இயற்கை விவசாய மாதிரிப் பண்ணை ஒன்றை அமைப்பதற்காக 'திவிநெகும' பயனாளிகள் பாடசாலை வளாகத்தில் உள்ள தோட்டக் காணியைத் துப்புரவு செய்வதில் நேற்று செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

வீட்டுக்கு வீடு இயற்கை விவசாய முறைமைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு பாடசாலையிலும் இயற்கை முறையான  விவசாயச் செய்கையில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்திற்கு அமைய 'திவிநெகும' பயனாளிகளைக் கொண்டு இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மாங்கேணி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.அருள்ஜோதி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .