2026 மே 09, சனிக்கிழமை

dd

வாகரையில் நூலகம் அமைப்பதற்கான ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 20 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் சகல வசதிகளுடனும் கூடிய பெரிய நூலகமொன்றை ஸ்தாபிக்கும் ஆய்வில் களனி பல்கலைக்கழக நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கை மாணவர்களும் விரிவுரையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

வாகரையில் சகல விதமான ஆய்வுகளுக்கும் கற்கைகளுக்குமான நூலகமொன்றை ஆரம்பிக்கும் முயற்சியை  தேசிய நூலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான வீரசிங்ஹ முன்வைத்திருந்தார்.

இம்முயற்சியின் தொடர்ச்சியாக தற்போது களனி பல்கலைக்கழக நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கை மாணவர்களும்  விரிவுரையாளர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கைகள் பிரிவின் பீடாதிபதியும் பேராசிரியருமான டிகிரி ஹேரத் குணதிலக்க தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இவ்வாய்வின்போது வாகரை பிரதேசத்திலுள்ள மீனவர்கள்,  விவசாய சமூக மக்கள், கடல் மற்றும் வனவேடுவ சமுதாயத்தினர், துறை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டன.
இப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியுடன் கூடிய துரித அபிவிருத்திக்காகவும் தேசத்தின் சமுத்திர வளங்கள், வனவளம், காலநிலை, கரையோர சமுதாய மக்கள் பற்றிய ஆய்வுக்காகவும் வாகரை பிரதேசத்தில் அமையப்பெறவுள்ள  இந்நூலகத்தை எதிர்காலத்தில் பயன்படுத்தப்படலாமெனவும் அவர் கூறினார்.

இவ்வாய்வுக் குழுவில் களனி பல்கலைக்கழக நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கைப் பிரிவின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான டபிள்யூ.ஏ.வீரசூரிய, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் களனி பல்கலைக்கழக நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கை பட்டப்படிப்புக்கள் பிரிவின் பேராசிரியருமான எச்.எம்குணரெத்ன பண்டா ஆகியோரும் பங்குபற்றினர்.

மேலும், நேற்று புதன்கிழமை வாகரை பிரதேச செயலகத்தில் அந்தப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகியை களனி பல்கலைக்கழக நூலக மற்றும் விஞ்ஞானக் கற்கை மாணவர்களும் விரிவுரையாளர்களும் சந்தித்து கலந்துரையாடியதுடன், நூலகம் அமைப்பது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .