2026 மே 09, சனிக்கிழமை

பள்ளிவாசலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Kanagaraj   / 2013 ஜூன் 20 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எஸ்.எம். றம்ஸான்


மஸ்ஜிதுல் குபா எனும் புதிய பள்ளிவாசலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் 20இலட்சம் ரூபாய் செலவில் இப்பள்ளிவாசல் கட்டிட நிர்மாணப்பணிகள் இடம்பெற உள்ளன.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழுத்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உட்பட சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் வை.எம்.ஹனீபா, மாநகரசபை உறுபபினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், அரசியல் பிரமுவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .