2026 மே 14, வியாழக்கிழமை

வீதி விபத்துக்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 21 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸார் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன் முதற்கட்டமாக காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குர்ஆன் சதுக்கத்தில நேற்று வியாழக்கிழமை மாலை வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது வீதி விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புக்கள்,  வீதி போக்குவரத்து ஒழுங்குமுறை ஆகியவை தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விழிப்புணர்வூட்டினர்.  மேலும், மோட்டார் சைக்கிளில் செல்வோர் தலைக்கவசம் போடவேண்டியதன் அவசியம், மோட்டார் சைக்கிளில் செல்வோர் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு செல்லும்போது ஏற்படும் விபத்துக்கள், வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாமல் செல்லும்போது ஏற்படும் விபத்துக்கள், போக்குவரத்து ஒழுங்கைப் பின்பற்ற வேண்டியதன் நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திரனின் ஆலோசனைக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க ஆகியோரின் ஒருங்கிணைப்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர்  இவ்விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிஸார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .