2026 மே 14, வியாழக்கிழமை

dd

மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 23 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 14ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் நேற்று சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ரீ.எம்.காலித் ஹம்ஸா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட பலர்; கலந்து கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 550 உறுப்பினர்களில் 265 உறுப்பினர்கள் உயர்மட்ட உறுப்பினர்கள், கூடுதலாக சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்கள் என பல்வேறு மட்டத்திலும்  பதக்கமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .