2026 மே 09, சனிக்கிழமை

மீனவர் காப்புறுதியில் அக்கறையில்லை: கடற்றொழில் பணிப்பாளர்

Menaka Mookandi   / 2013 ஜூன் 23 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மற்றும் வாவி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு தங்களை காப்புறுதி செய்துகொள்வதில் அக்கறையில்லை' என்று கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ்; தெரிவித்தார்.

'இம்மாவட்டத்தில் 800பேர் காப்புறுதி திட்டத்தில் இணைந்துள்ளனர். இம்மாதத்தில் வருடாந்த காப்புறுதி கட்டணம் செலுத்த வேண்டியுள்ள போதிலும் 90 சதவீதமானவர்கள் இன்னும் செலுத்தவில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் முழுநேர மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளன. அண்மைய காற்று மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது 41 மீனவர்கள் பலியாகி பலர் காணாமல் போயுள்ளனர். இத்தகைகய சூழலில் மீனவர் காப்புறுதி மிக முக்கியத்துவம் பெறுகிறது' என்றும் அவர் வலியுறுத்தினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .