2026 மே 15, வெள்ளிக்கிழமை

காதி நீதிமன்றம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 23 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன் எம்.முர்ஸித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்திற்கான காதி நீதிமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

மாஞ்சோலையிலேயே காதி நீதிமன்றத்தின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ரவூப்; ஹக்கீமின்  45 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

ஓட்டமாவடி காதி நீதிபதியும் சட்டத்தரணியுமான எம்.ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .