2026 மே 09, சனிக்கிழமை

வாழைச்சேனை காதி நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை காதி நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடமொன்றை அமைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வாழைச்சேனை காதி நீதிமன்றம் தற்காலிகமாக வாழைச்சேனை வைத்தியசாலைக் கட்டிடத்திலேயே இயங்கிவருகின்றது.

வாழைச்சேனை காதி நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக நாவலடிச் சந்தியில் காணியொன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த வருடம் இக்காணியில் புதிய நீதிமன்றக் கட்டிடத்திற்கான நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும்  நீதியமைச்சர் ரவூப்; ஹக்கீம்; தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .