2026 மே 09, சனிக்கிழமை

dd

சைவசமய அறநெறி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஈழத்து திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தெய்வநெறிக் கழகம் சைவசமய அறநெறி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி ஒன்றை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இப்பயிற்சிநெறியின் தலைமை ஆச்சாரியாராக இந்தியாவை சேர்ந்த சர்வதேச வேதாந்த மன்றத்தினுடைய சுவாமி வேதாந்த ஆனந்தா என்பவரே தலைமைக் குருவாக இந்து பயிற்சிநெறியினை நடத்துவார்.

மூன்று மாதங்கள் பிரதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணி தொடக்கம் 5.30 மணிவரை ஈழத்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் இப்பயிற்சிநெறி நடைபெறும்.

இப்பயிற்சிநெறியின் முடிவில் தெய்வநெறிக் கழகத்தினால் சான்றிதழ்கள்; வழங்கப்படும்.

இதில் இணைந்து பயன்பெற விரும்புகின்ற சைவசமய அறநெறி ஆசிரியர்கள், தெய்வநெறிக் கழகம், ஈழத்து திருச்செந்தூர் முருகன் கோவில், மட்டக்களப்பு என்னும் முகவரியுடன் அல்லது 0652228577  0653652160  0757029673 என்ற  தொலைபேசி இலக்கங்களுடன்  தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .