2026 மே 09, சனிக்கிழமை

dd

படுவான்கரை பிரதேச சாதனை மாணவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 24 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியேறிய பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி மற்றும் கல்வி சார்ந்த வேறுதுறைகளில் சாதனை படைத்த படுவான்கரை பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்த விழாவில் இச்சங்கத்தின் அனுசரணையுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்கே இவ்விருதுகள் விழங்கப்பட்டன. கல்லடி கல்வி அபிவிருத்தி சங்க மண்டபத்தில் விழா நடைபெற்றது.

அடிப்படைவசதிகளின்றி பல் வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரம் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பல மாணவர்கள் இப்பிரதேசங்களில் பெற்றுள்ளனர். அவர்கள் இனங்காணப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அபிவிருத்தி சங்க பெற்றோர் அமைப்பின் தலைவர் எஸ்.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் ஜப்பான் கராத்தே சங்கத்தின் கிழக்கு மாகாண அமைப்பாளர் கே.சுந்தரலிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மாணவர்களின் கராத்தே கண்காட்சியும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .