2026 மே 09, சனிக்கிழமை

அஸாத் சாலியின் கூட்டத்திற்கு காத்தான்கு நகர சபை அனுமதி மறுப்பு

Super User   / 2013 ஜூன் 24 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி காத்தான்குடியில் நடத்தவிருந்த கூட்டத்திற்கு நகர சபை அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இதனால் கூட்டம் நடாத்துவதை கைவிட்டுள்ளதாக அந்த கூட்டத்தின் எற்பாட்டாளரும் கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான கே.எம்.முகம்மட் பஸ்லி தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கூட்டம் ஒன்றை நடாத்தவிருந்தார்.

இந்த கூட்டத்தை கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்துவதற்கு காத்தான்குடி நகர சபையிடம் அனுமதி கேட்ட போதே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கூட்டத்தின் எற்பாட்டாளரும் கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான கே.எம்.முகம்மட் பஸ்லி தெரிவிக்கையில்,

"பொதுமக்களுக்கு அஸாத் சாலி நன்றி தெரிவிக்கும் வகையில்; கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தின் அனுமதி கோரி நகர சபைக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்தோம். அக்கடிதத்தை அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர் பாறூக் என்பவர் மேலதிக நடவடிக்கைக்காக காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் என்பவருக்கு அனுப்பினார்.

இதையடுத்து காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீமை சந்தித்து அனுமதி கேட்டோம.
ஆனால் அவர் அனுமதி தரமுடியாது என மறுத்து விட்டார்" என்றார்.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீமை தொடர்பு கொண்டு கேட்ட போது,\

"அனுமதியை மறுக்கவில்லை சில நிபந்தனைகள் தொடர்பாக பேசுவதற்கு கூட்டத்திற்கான மண்டப அனுமதியை கோரியவர்களை வருமாறு அழைத்தேன்" என்றார்.

எனினும் இந்த கூட்டம் மண்டப அனுமதி மறுப்பினால் காத்தான்குடி கூட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் மேற்படி பஸ்லி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .