2026 மே 09, சனிக்கிழமை

dd

வறுமையான மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு, வாகரை காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைகோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் கடந்த (24) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் (Nழுறு றுழுறு) மூலம் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, 325 பாதணிகள் உட்பட அப்பியாசக் கொப்பிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மாணவர்களுக்க வழங்கி வைத்தார்.
 
இதேவேளை, இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதற்காக தமது சொந்த நிதியில் இருந்து இருபத்தையாயிரம் ரூபாயை நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வழங்கி வைத்தார்.
 
கல்வி உபகரணங்களை வழங்கிவைத்த கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பினருக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தமது நன்றிகளை தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .