2026 மே 09, சனிக்கிழமை

dd

நிரந்தர வீடுகளின்றி அவதியுறும் 'சிகரம்' கிராம மக்கள்

Menaka Mookandi   / 2013 ஜூன் 26 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 'சிகரம்' கிராமத்தில் சுனாமி மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேறிய மக்களுக்கு இன்னும் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லையென அக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

65 குடும்பங்களைச் சேர்ந்த 300பேர் வசித்து வரும் இக்கிராமத்தில் பெரும்பாலும் சுனாமி அனர்;த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களே வசித்து வருகின்றனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இவர்களுக்கான நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இக்கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்த மக்கள் காத்தான்குடியில் வசித்து வந்தனர். பின்னர் அங்கு சுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து மீண்டும் இந்த சிகரம் கிராமத்திற்கு சென்று மீளக்குடியமர்ந்தனர்.

இந்நிலையில், கடந்த எட்டு வருடங்களாக குடிசைகளிலும் தற்காலிக வீடுகளிலுமே வசித்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மழை காலத்திலும் மற்றும் வெயில் காலத்திலும் நிரந்தமான வீட்டு வசதியில்லாததால் இந்த கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாவதாக இக் கிரமாத்தின் ஜும் ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் குறி;ப்பிடுகின்றார்.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பலமுறை இக்கிராமத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றும் இன்னும் எந்தவொரு வீடும் இங்கு நிர்மாணிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டவர்காளவர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .