2026 மே 09, சனிக்கிழமை

dd

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 26 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
, க.ருத்திரன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை விடுதிக்கல் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மாணவர்களுக்கு பாதணிகளும்; கல்வி உபகரணங்களும்; நேற்று செவ்வாய்கிழமை  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும் விதவைகளுக்கும் வறியவர்களுக்குமான அமைப்பின் (NOW WOW) உதவி மூலம் இவை வழங்கப்பட்டன.

இப்பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 40 மாணவர்களுக்கு பாதணிகளும் அப்பியாசக் கொப்பிகளும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .