2026 மே 14, வியாழக்கிழமை

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விசேட நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்களத்தினால் நேற்று மாலை பல்வேறு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மதுவரி திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைவஸ்த்து பாவனையால் ஏற்படும் விளைவுகள் அடங்கிய துண்டுப்பிரசுர விநியோகம் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றது.

இலங்கை மதுவரி ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டலில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .