2026 மே 09, சனிக்கிழமை

dd

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது

A.P.Mathan   / 2013 ஜூன் 30 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்
 
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குள விடுதி ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றவர்கள் எனும் குற்றச்சாட்டில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கிரான்குள விடுதிக்குச் சென்ற காத்தான்குடிப் பொலிஸார், இரு ஆண் பிள்ளைகளைகளும் ஒரு பெண் பிள்ளையும் அடங்கலாக 5 குடும்ப உறுப்பினர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ததாகவும் இவர்களை காத்தான்குடிப் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணை நடாத்திவருவதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
 
கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
கடந்த வியாழக்கிழமை இப் பிரதேசத்தைச் சேர்ந்த செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 23 பேர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .