2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களுக்கான புதிய சட்டத்தை தளர்த்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் அமர்ந்து செல்லும் பெண்கள் இரு பக்கங்களுக்கும் கால்களை வைத்து செல்ல வேண்டும் என்ற சட்டத்தை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கூறியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து செல்லும் பெண்கள் இரு  பக்கங்களுக்கும் கால்களை வைத்து செல்ல  வேண்டும் என்று  மோட்டார் போக்குவரத்து பொலிஸார் வலியுறுத்திவருகின்றனர்.

இவ்வாறு செல்லாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் போக்குவரத்து பொலிஸார் முற்படுகின்றனர்.

மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து செல்லும் பெண்கள் இரு பக்கங்களுக்கும் கால்களை வைத்துச் செல்வதால் பெண்கள்  எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பெண்களின் கலாசார உடை மற்றும் அந்த உடைகளை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் இரு பக்கங்களுக்கும்  கால்களை வைத்து பெண்கள் பயணிப்பதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  இந்தச் சட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் தளர்த்துவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தன்னிடம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .