2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காணாமல் போன படகு கரையை வந்தடைந்தது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாசல் துறையடியிலிருந்து சென்ற இயந்திரப் படகு ஒன்று காணாமல் போன நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை கடற்கரையை வந்தடைந்துள்ளதாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முபாறக் தெரிவித்தார்.

கடந்த 03ஆம் தொழிலுக்காக ஆழ்கடலுக்கு இந்த இயந்திரப் படகு சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தது.

படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக படகை செலுத்த  முடியாமல் தாங்கள் கஷ்டப்பட்டதாகவும் இந்த நிலையில், படகிலிருந்த கூரப்பாயின் உதவியுடன் காற்று வீசிய திசையை நோக்கி கல்முனை கடற்கரையை தாங்கள் வந்தடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்படகில் பயணித்த மூவரும் தேகராக்கியோத்துடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X