2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மகளிர் கைவினைத்திறன் உற்பத்தி பொருட்கண்காட்சி

Super User   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களமும் ஏறாவூர் நகர பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மகளிர் கை வினைத்திறன் உற்பத்தி பொருட் கண்காட்சி இன்று ஏறாவூர் நகர பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி.எம்.எம்.எஸ். சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.அருந்தவராஜா, ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.முஹம்மத் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மகளிர் அமைப்புக்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு அலங்கார கைவினைப் பொருட்களும், உடுதுணிகளும் இன்னும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X