2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் வந்தாறுமூலை பேக் ஹவுஸ்  வீதியைச் சேர்ந்த கணேசபிள்ளை பாஸ்கரன் (வயது 29) என்பவரே மரணமடைந்துள்ளார்.

விபத்தில் மரணமடைந்த இளைஞர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதுண்டு பின்னர் வீட்டு மதிலில் மோதுண்டு விபத்திற்குள்ளானது. 

இதன்போது படுகாயமடைந்த இவர் உடனடியாக அவர் ஏறாவூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது அங்கு  சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .