2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கலைவாணி கல்விக்கு ஆதாரம் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்பின் பேரில் சகல பிரதேச செயலகங்களினாலும் கலைவாணி கல்விக்கு ஆதாரம் வேலைத்திட்டம் நவராத்திரி விழாவின் இறுதி மூன்று நாட்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மண்முனை மேற்குப் பிரதேச செயலக வாணி விழாவும் கலைவாணி கல்விக்கு ஆதாரம்  திட்டமும் நிகழ்வு  நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக பிரதேச செயலகங்களில் வாணி விழா கொண்டாடும் வேளையில் கலைவாணி கல்வி ஆதாரம்  திட்டத்தினை முன்னெடுக்குமாறு பிரதேச செயலாளர்களிடம் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் வேண்டுகோள் விடுத்தார்.

வாணி விழா கொண்டாடப்படுகின்ற நிலையில் வாணி விழாவிற்கு சேகரிக்கப்படுகின்ற நிதியில் இருந்து ஒவ்வொரு பிரதேச செயலகங்களினாலும் 2014ஆம் ஆண்டு பாடசாலைக்கு முதலாம் ஆண்டுக்கு சேரவிருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 10  சிறார்களைத் தெரிவு செய்து அவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கி கலைவாணி கல்விக்கு ஆதாரம் திட்டத்தினை முன்னெடுக்குமாறும் இத்திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட குறித்த 10 சிறார்களும் பல்கலைக்கழகம் செல்லும்வரை தொடர்ச்சியாக வருடா வருடம் கற்றல் உபகரணங்கள் மற்றும் முடியுமான உதவிகளை வழங்கி அவர்களது கல்வி மேம்பாட்டிற்கு இத்திட்டத்தினை முன்னெடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் வாணி விழா கொண்டாடிய நிலையில் 2014ஆம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லவிருக்கும் 10 சிறார்களுக்கு புத்தகப்பைகள்  மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இத்திட்டத்தினுடாக இச்சிறார்களுக்கு வருடா வருடம் கல்விக்கான உதவிகள் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் நிகழ்வின்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X