2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் ஊழல் ஒழிய வேண்டும்: அருண் தம்பிமுத்து

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பில் அரசாங்கம் செலவு செய்த நிதி எங்கு சென்றது என்று தெரியாதுள்ளது. யுத்தம் முடிவுற்று 4 வருடங்களுக்குள் 40 ஆயிரம் கோடி ரூபாவை அரசாங்கம் மட்டக்களப்பில் செலவு செய்துள்ளது. எங்கு, எப்படிச் செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியாதுள்ளது. அந்த அளவிற்கு பாரிய ஊழல் மட்டக்களப்பில் காணப்படுகின்றது. இந்த நிலை மட்டக்களப்பில் ஒழிய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளரும் ஜனாதிபதி இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை கன்னன்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் அப்பகுதி கிராம மக்களுடன் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்;போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பில் மாற்றம் வர வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் பணம் மக்களைச் சென்றடைய வேண்டும். இந்த நிலை உருவாக வேண்டுமாயின் மட்டக்களப்பில் காணப்படும் பாரிய ஊழல் ஒழிய வேண்டும்.

அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் பணம் மக்களை சென்றடைவதில்லை.

மட்டக்களப்பின் அவல நிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காணப்படுகின்றது. மக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதாக இல்லை. குறித்த காலத்துக்கு முன் இருந்த நிலை மாறியுள்ளது. கூடுதலாக தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பதிலேயே முக்கிய வைத்தியர்கள் குறியாக உள்ளனர். இதனால் ஏழை மக்களுக்கும் பாமர மக்களுக்கும் சிறந்த சேவை வழங்கப்படுவதாக இல்லை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் மட்டக்களப்பில் காணப்படும் ஊழல் நிலை மாற்றமடையும் பட்சத்திலேயே மக்களுக்கு அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் சென்றடையும் மக்கள் பயன்பெறுவார்கள்.

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்கின்றனர்.  தமிழரசுக் கட்சியினால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களால் என்ன செய்ய முடியும். ஒன்றுமே செய்ய முடியாது.

60 வருடகாலமாக நான் மதிக்கும் அரசியல் தலைவர்கள் இல்லை. என்னால் மதிக்க முடியவில்லை. காரணம் எமது மாவட்டம் அனைத்து வளங்களையும் கொண்டிருந்தும் மாற்றம் வரவில்லை என்றால் அதனைப் பயன்படுத்தாமைக்கு அரசியல் தலைவர்களே காரணம். இதனால் என்னால் அவர்களை மதிக்க முடியவில்லை" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X