2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புத்தக, ஓவியக் கண்காட்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


தேசிய வாசிப்பு மாத்தினையொட்டி முன்னிட்டு மட்டக்களப்;பு களுதாவளை கிராமத்தில் வாசகர் வட்டத்தின் எற்பாட்டில் இன்று மாபெரும் புத்தகக் கண்காட்சியும், ஓவியக் கண்காட்சியும் களுதாவளை பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சி நாளை மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

வசகர் வட்டத்தின் தலைவர் இ.ஞானசேகரன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி.ந.சத்தியானந்தி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் (சட்டத்தரணி) கி.துரைராசசிங்கம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியில் பழமைவாய்ந்த நூல்கள்;, ஏடுகள், புதிய வெளியீடுகள், உள்ளூர் கலைஞர்களின் படைப்புக்கள், மற்றும் பிரதேச சித்திர படைப்பாளிகளினால் வரையப்பட்ட ஒவியங்கள், சிற்பங்கள், என்பன காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வில், ஓவியக்கலை வளர்ச்சிக்கு உந்து சக்தியளித்து வருவதற்காக வேண்டி பிரபல ஓவியர்களான ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் செ.டானியல், உதவிக் கல்விப் பணிப்பாளர் (அழகியல்) க.சுந்தரலிங்கம், சேவைக்கால ஆலோசகர் (சித்திரம்) அ.ஜெயவரதராஜன் ஆகியோர் களுதாவனை வாசகர் வட்டத்தினால் பொன்னாடை போர்தி மலர் மாலை அணிவித்து
கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராசசிங்கம் நூலகத்திற்கு கணினி அன்பழிப்புச் செய்யப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .