2025 மே 03, சனிக்கிழமை

வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் கிழக்கு பிராந்திய தேசிய விழிப்புலனற்றோர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு ஊர்வலம் திங்கட்கிழமை (28) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் ஜே.சுதேசன் தலைமையில் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி நகர மணிக்கூட்டுக் கோபுரம், திருமலை வீதி, புகையிரத நிலைய வளியாள கோட்டைமுனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியை சென்றடைந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கலாசாலை மண்டபத்தில் கிழக்கு பிராந்திய தேசிய விழிப்புலனற்றோர் சம்மேளனத்தினரின் பாடல்கள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகப் பணிப்பாளர் ஏ.செல்வேந்திரன், தேசிய விழிப்புலனற்றோர் சம்மேளனத்தின் தலைவர்
எம்.வடிவேல், லயன்;சபையின் பிரதி செயலாளர் என்.வி.ரஞ்சன், தரிசனம் விழிப்புலனற்றோர் பட்டதாரி மாணவன் என்.கிருஷ்ணகுமார், சம்மேளத்தின் செயலாளர் எஸ்.இதயராஜ் ஆகியோர் இதன்போது உரையாற்றினர்.

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி கடந்த 1992 முதல் இவ்வாறான விழிப்புணர்வு ஊர்வலங்களை மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X