2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வார உரைகல் பிரதம ஆசிரியர் பிணையில் விடுதலை

Super User   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியை மையமாகக்கொண்டு வெளியிடப்படும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மத்துல்லா இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா இருப்பதாக தெரிவித்து புவி றஹ்மத்துல்லாஹ்வின் வீட்டை பொலிஸ் மோப்ப நாய் மூலம் காத்தான்குடி பொலிஸார் இன்று தேடுதல் மேற்கொண்டனர். இதன்போது கஞ்சா கட்டொன்று அவரின் வீட்டு வளாகத்திலிருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனால் புவி றஹ்மத்துல்லாஹ் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிகுடி சுற்றல்லா நீதிமன்றில் பதில் நீதவான் பிரேம்நாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.இதன்போது இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் புவி றஹ்மத்துல்லாஹ் விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை நவம்பர் 26ஆம் திகதி வரை பதில் நீதவான் ஒத்திவைத்தார். எவ்வறாயினும் வீட்டில் கஞ்சா இருக்கவில்லையெனவும் புவி புவி றஹ்மத்துல்லாவை கைது செய்வதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் எனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி:


'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கைது

  Comments - 0

  • குமார் Thursday, 31 October 2013 01:09 PM

    இலங்கை பொலிஸாரினது மிக கீழ்த்தனமான செயல்...

    Reply : 0       0

    VALLARASU.COM Friday, 01 November 2013 03:28 PM

    புவி... நீங்கள் வெளியிட்டது உண்மைதானே, பயப்பட வேண்டாம்... நிச்சயமாக உங்களை இறைவன் காப்பாற்றுவான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X