2025 மே 03, சனிக்கிழமை

பசும்பாலிலான உணவுகள் தயாரிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தித் திணைக்களமானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்ளெழுச்சித் திட்டத்தின் நிதியுதவியுடன் பசும்பால் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தும்பங்கேணிப் பகுதியில் வேலைவாய்ப்பின்றியுள்ள யுவதிகளைக் கொண்டு பசும்பால் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேற்படி யுவதிகளுக்கு தொழில் வழங்கும் நோக்குடனும் பால் உற்பத்தியை  அதிகரிக்கும் நோக்குடனும் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தும்பங்கேணி அரச கால்நடை வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

'அமுதசுரபி'  என்ற பெயரில் இயங்கும் இந்த நிலையத்தில் பசும்பாலின் மூலம்  பாலிலான இனிப்புப்பண்டம், ஐஸ்கிறீம், யோக்கட், தயிர், கிருமி நீக்கப்பட்ட தூய பசும்பால், நெய் போன்றன தற்போது செய்யப்பட்டு வருகின்றன.

இது தவிர பசும்பாலினைக் கொண்டு வெவ்வேறு வகையான பால் உற்பத்திப் பொருட்களை செய்யவும்  திட்டமிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X