2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 08 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது  தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு காத்தான்குடியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது  தொடர்பான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள மீராபாலிகா மகாவித்தியாலயத்தில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

கொழும்பு இனாவீல் கழகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வியமைச்சு மற்றும் பொலிஸாரின் அனுசரணையுடன் இந்த விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கொழும்பு இனாவீல் கழகத்தின் இணைப்பாளர் ஜேசி முலேல், அதன் முன்னாள் தலைவர் மிரமாலி சம்மிக மற்றும் அதன் முக்கியஸ்தர்  சவர்ன சொய்சா, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .