2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்குகள்

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் ஆணையாளர் க.சிவநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

உக்கக் கூடிய கழிவுகள் மற்றும் உக்காத கழிவுகள் வௌ;வேறு நாட்களில் மாநகரசபைக்கட்பட்ட  பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் சேகரிக்கப்படும் 

சேகரிப்பு இல்லாத நாட்களில் கழிவுகளை வீட்டு வளவிற்கு வெளியே கொட்டாது பைகளில் இட்டு வீட்டினுள் வைத்து வாகனம் வரும் நாட்களில் ஒப்படைக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் உக்கக் கூடிய கழிவுகள், நீண்ட காலத்தில் உக்கக் கூடிய மற்றும் உக்காத கழிவுகள், மீள் சுழற்சி செய்யக்க கூடிய கழிவுகள் என பிரிக்கப்பட்டுள்ள விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய யூனியனின் மேலதிக நிதியுதவியுடன் யுனொப்ஸ் நிறுவனத்தின் ஊடாக இத்திட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சேவையினை வெற்றிகரமாக நடமுறைப்படுத்த  குடியிருப்பாளர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .