2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தியேட்டர் மோகன் சு.க.வில் இணையும் சாத்தியம்

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தியேட்டர் மோகனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளும்படி மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலொசகரும் ஏறாவூர் நகர  சபையின் முதல்வருமான அலிசாஹிர் மௌலானா அழைப்பு விடுத்துள்ளதாக தியேட்டர் மோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை. இன்று காலை கூட கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, கலாசார சீரழிவுகளுக்கு எதிராக சில அதிரடியான
வேலைகளை முன்னெடுத்து செல்கின்றேன்.

இது கட்சியின் பெயருக்கு கழங்கம் விளைவிப்பதாக எண்ணுகின்றார்களோ தெரியவில்லை. எது எப்படியோ நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட கலாசார சீரழிவுகளை இன்னுமொரு சமூகம் எம் மண் மீதும் மக்கள் மீதும் திணிக்கும் போது எம்மால் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.

இக்காரியங்களால் கட்சிக்கு பாதகம் ஏற்படும் என்று கருதினால் கட்சியை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன்' என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் கலந்துரையாடியதன் பின்பு தனது இறுதி முடிவினை எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் உயர் மட்ட அரசியல் பிரமுகர் ஒருவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0

  • kanthan Friday, 08 November 2013 03:35 PM

    இவரை எந்த கட்சி சேர்க்கிறரோ அந்த கட்சி சர்வ நாசம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .