2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கடலில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வெளிச்சவீடு முகத்துவாரம் கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

திராய்மடுவைச் சேர்ந்த ஏ.டி. ராஜேந்திரன் (வயது 49) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஏழாம் திகதி கடலுக்குச் சென்றபொழுது கடலில் தவறி விழுந்தார் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீனவரின் சடலம் முகத்துவாரம் கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கியிருப்பதாக மீனவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சகிதம் பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டதாகத் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .