2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திங்கள் முதல் புதன் வரை நடமாடும் அடையாள அட்டை சேவை

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை ) பிரதேச செயலகப்பிரிவில் நடமாடும் அடையாள அட்டை சேவை 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதில் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்திலும் பகல் வாகரை மகாவித்தியாலயத்திலும், 12 ஆம் திகதி காலை வாகரை மகா வித்தியாலயத்திலும் பகல்  கேணிநகர் கலாசார வித்தியாலயத்திலும் பகல் மாங்கேணி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திலும், 13 ஆம் திகதி காலை பால்சேனை அ.த.க பாடசாலையிலும் இவ் நடமாடும் சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .