2025 மே 02, வெள்ளிக்கிழமை

அழிவுகளை எதிர்த்தேன்; என்னை இடைநிறுத்திவிட்டனர் : தியேட்டர் மோகன்

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்
 
தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு கலாசார சீரழிவுகளுக்கு எதிராக சில அதிரடியான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தது கட்சியின் நற்பெயருக்கு களங்கள் விளைவிப்பதாக கருதியே என்னை இடைநிறுத்தியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  சிரேஷ்ட உறுப்பினரும் தியேட்டர் மோகன் என்றழைக்கப்படும் தொழிலதிபருமான கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். 

காணி பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்துவருவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணபதிப்பிள்ளை மோகன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்மை தொடர்பாக அவரிடம் கேட்டபோது இவ்வாறு கூறினார்.

'இதுவரை எனக்கு உத்தியோக பூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அறிவிக்கப்படவில்லை. என்னை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக இணையத்தளங்கள் வாயிலாக மாத்திரமே அறிய முடிந்தது.
 
இன்று காலை கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உரையாடினார். தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு கலாசார சீரழிவுகளுக்கு எதிராக சில அதிரடியான வேலைத் திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கைகள் சிலசந்தர்பத்தில் கட்சியின் நற்பெயருக்கு களங்கள் விளைவிப்பதாக கருதுகின்றார்களோ தெரியாது.

எது எவ்வாறிருப்பினும் தமிழர்களுக்கெதிரான திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு கலாசார சீரழிவுகள் நடைபெறும் போது எம்மால் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எங்களது அதிரடியான நடவடிக்கைகள் தொடரும். தேவை ஏற்படின் கட்சியை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன்' என பதிலளித்தார்என்றார்.

த.ம.வி.பு கட்சி விளக்கம்


தமது கட்சி விதிகளை மீறி மக்களிடம் காணி பெற்று தருவதாக பணம் பெற்று காணி வழங்காமல் மோசடி செய்துவருவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தியேட்டர் மோகன் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மோகனுக்கு கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மோகன் கடந்த சில காலமாக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுவருவதாக பொதுமக்களாலும்,கட்சியின் உறுப்பினர்களாலும் கட்சியின் தலைவர் பணிக்குழுவிற்கு பலமுறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய கட்சி யாப்புவிதிகளுக்கு முரணாக நடந்துள்ளீர்கள் எனதெரியவருகின்றது. இது கட்சியின் நன் மதிப்பிற்குகுந்தம்விளைவிப்பதுடன் சட்டத்திற்கு முரணான நடவடிக்கையுமாக அமைகின்றது.

பலரிடம் இருந்தும் காணி பெற்றுத் தருவதாக பணம் பெற்று காணி கொடுக்காமல் மோசடிசெய்துவருவதாகவும்,கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய தங்களை கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தவது என தலைவர் பணிக்குழுவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இக்காலஎல்லைக்குள் தாங்கள் கட்சி தொடர்பானஎந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ, கட்சியின் பெயரை பயன்படுத்துவதோ கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமையமுரணானது என சுட்டிக்காட்டுவதுடன் தங்கள் மீதானகுற்றச்சாட்டுக்களைவிசாரணைசெய்யும் பொருட்டுதலைவர் பணிக்குழவினால் கட்சியின் பிரதிதலைவர் க.யோகவேள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவிற்கு 21.11.2013 ஆம் திகதிக்கு முன்னர் நியாயப்படுத்தல்களை எழுத்து மூலம் தெரியப்படுத்தும்படியும் இவர்களது பூரணத்துவமான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .