2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கில் பெண் சாரணியத்தை கட்டியெழுப்ப புதிய வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 11 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு மாகாணத்தில் பெண் சாரணியத்தினை கட்டியெழுப்பும் வகையில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை பெண் சாரணிய சங்கமும் கிழக்கு மாகாண பெண் சாரணிய சங்கமும் இணைந்து இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் கட்டமாக மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பெண் சாரணியர்களுக்கான பயிற்சிப்பட்டறை வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை கேட்போர்  கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பெண் சாரணிய ஆணையாளர் திருமதி டிலாந்தினி மோகனகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் பிரதம ஆணையாளர் திருமதி ஜெஸ்மின் ரஹீம், பிரதி ஆணையாளர் திருமதி விசாகா திலனரட்ன, மேலதிக ஆணையாளர் சுலாறி ஜயவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பெண் சாரணிய வலய, கோட்ட ஆணையாளர்கள், பெண் சாரணிய வழிகாட்டுனர்களும் கலந்துகொண்டனர். இதன்போது பெண் சாரணியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் பெண் சாரணியத்தின் வளர்ச்சி போன்றவை தொடர்பில் கருத்துகள் பகிரப்பட்டன.

அத்துடன் தலைமைத்துவம் பெண் சாரணியத்தின் பங்கு தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் பெண் சாரணியத்தினை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைக் கொண்டதாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் பிரதம ஆணையாளர் திருமதி ஜெஸ்மின் ரஹீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .